RECENT NEWS

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அ.தி.மு.க. எம்.பி.இன்பதுரை

Mar 13, 2026

BIG STORIES

ஐயம் எதற்கு உமக்கு?.. Bank திறந்துதான் கிடக்கு.. SBI ஊழியர்கள் அலட்சியம்.. காத்திருந்த சர்ப்ரைஸ்!

Jun 06, 2025 07:47 AM

140

ஐயம் எதற்கு உமக்கு?.. Bank திறந்துதான் கிடக்கு.. SBI ஊழியர்கள் அலட்சியம்.. காத்திருந்த சர்ப்ரைஸ்!

“தட்டுத்தடுமாறிய கால்கள்... தடம் கண்டுவிட்ட நாட்கள்...இன்று உறுதிநடை போடுது உமக்கு. எனக்கெதற்கு? இனி நமக்கு... வாழ்க்கை என்பது வேகம்... விரைந்து ஓடுகிறது காலம்...நிதானமாய் இருக்க பழக்கு... அதுதான், அசல் பாதுகாப்பு... ஐயம் எதற்கு உமக்கு?” என்றெல்லாம் மக்களிடம் விளம்பரம் செய்தது எஸ்.பி.ஐ. வங்கி! ஆனால், வங்கி ஊழியர்களோ, நிதானம் தவறி, Bank-யே பூட்டாமல் சென்று, அசல் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கியதுதான், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, ஆவடி, செக்போஸ்ட் அருகே, அரசு பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் பாரத ஸ்டேட் வங்கி கிளை, செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுவது வழக்கம்.

இந்தநிலையில், நள்ளிரவு 12:30 மணியளவில், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ. சிவக்குமார், ஆவடி சி.டி.எச் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குறிப்பிட்ட வங்கிக் கிளையை அவர் கடந்தபோது, வங்கியின் மரக்கதவு மற்றும் இரும்பால் ஆன கதவும் பூட்டாமல் இருந்ததை கவனித்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த போலீஸார், வங்கியில் குறிப்பிடப்பட்டிருந்த தொடர்பு எண்களுக்கு தொடர்ந்து தொடர்புகொண்டுள்ளார்கள். ஆனால், வங்கி அதிகாரிகள் யாரும், உடனடியாக அட்டெண்ட் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து வங்கியின் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவரும், பெண் பணியாளரும் கடைநிலை ஊழியர் சுரேந்தரும் வங்கியில் ஆய்வு செய்தனர். அப்போது, அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை என தெரிந்தது. விசாரணையில், நேற்றிரவு 7:30 மணியளவில் ஊழியர்கள் கவனக்குறைவாக வங்கியின் கதவுகளை பூட்டாமல் சென்றது தெரிய வந்தது

மேலும் விசாரணையில், வங்கியில் 3000 -க்கும் மேற்பட்டோர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர் என்பதும், தற்போது மட்டும் வங்கியில் 50 லட்சம் ரூபாய் இருப்பு இருந்ததாகவும் தெரிய வந்தது. உரிய நேரத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டதால், அதிர்ஷ்டவசமாக வங்கியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் திருடு போகாமல் தப்பியது, என கூறப்படுகிறது.

இந்நிலையில், வங்கிக்கு முழு நேர காவலாளி நியமிக்கப்பட வேண்டும் என்று காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். மேலும், ரோந்து பணியின்போது சிறப்பாக செயல்பட்ட காவல் எஸ்.ஐ. சிவகுமாரை அவர் வெகுவாக பாராட்டினார்.

“நிதானமாய் இருக்க பழக்கு... அதுதான், அசல் பாதுகாப்பு...” என எஸ்.பி.ஐ.யின் விளம்பரத்தையே எஸ்.பி.ஐ. வங்கி ஊழியர்களுக்கு, திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அங்கு வாடிக்கையாளர்களாக உள்ள பொதுமக்கள்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies