அரக்கோணம் - திருத்தணி இடையேயான மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு

0 314

அரக்கோணம் திருத்தணி இடையேயான மின்சார ரயிலில் பயணம் செய்த பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறித்த நபர், 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த அபிராமி என்பவர் கடந்த 11ஆம் தேதி ரயிலில் தூங்கியபடி சென்றபோது, அங்குமிங்கும் நடந்தபடி அவரை நோட்டமிட்ட இளைஞர் திடீரென செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு பழைய குற்றவாளியான நாகராஜ் என்பவரை கைது செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயினை பறிமுதல் செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments