வீட்டின் படுக்கை அறைக்குள் பளிச்சின்னு மின்னிய பேனா எடுத்து பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி..! வாடகை வீடா இனி இதையும் கவனிங்க

0 1147

சென்னை ராயபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த திருமணமான பெண்ணின் படுக்கை அறைக்குள் ரகசியமாக பேனா காமிராவை மறைத்து வைத்து,  உடை மாற்றும் காட்சிகளை வீடியோ எடுத்ததாக வீட்டின் உரிமையாளரின் மகனான, பயிற்சி பல்மருத்துவரை போலீசார் கைது செய்தனர்

சென்னை ராயபுரம் மாதா கோவில் தெருவில் 30 வயதான பெண் ஒருவர் தனது கணவர் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டின் படுக்கை அறையில் பொருட்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பொழுது அவரது வீட்டில் இதுவரை பார்த்திராத பேனா ஒன்றை கண்டெடுத்துள்ளார்.

அது விலை உயர்ந்த பேனா போன்று இருந்ததால் அது குறித்து தனது கணவரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்,

சந்தேகம் அடைந்த அவர் வீட்டிற்கு வந்து அந்த பேனாவை திறந்து பார்த்தபொழுது அது கேமரா பொருத்திய பேனா என்பது தெரிய வந்துள்ளது.

அந்த கேமராவுடன் கூடிய பெண்டிரைவ்வை தனது லேப்டாப்பில் பொறுத்தி பார்த்தபோது கணவன் மனைவியின் அந்தரங்க காட்சிகள் வீட்டில் இருந்த பெண் உடை மாற்றுவது போன்ற பல வீடியோக்கள் அதில் இருந்ததை பார்த்து தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணையில் தரைதளத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரான அப்துல் சமத் என்பவரின் மகன் இப்ராஹிம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த இப்ராஹிம், வீட்டுக்குள் ஆள் இல்லாத நேரத்தில் பின்வாசல் கதவிற்கான மாற்றுச் சாவியை பயன்படுத்தி உள்ளே சென்று பேனா கேமராவை படுக்கை அறையில் வைத்ததை போலீசார் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ராயபுரம் போலீசார் இப்ராஹீம் மீது பெண்ணை மானபங்கம் செய்தல், அத்துமீறி வீட்டிற்குள் நுழைவது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இப்ராஹிம் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பல் மருத்துவம் இறுதியாண்டு பயிலும் பயிற்சி மருத்துவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் 10 ஆண்டுகளாக இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் நிலையில், வீட்டு உரிமையாளரின் மகன் இப்ராஹீம் நடவடிக்கையில் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்ததாகவும், இதை போலீசாரிடம் கூறியதால், இந்த விவகாரத்தில் பல் மருத்துவர் இப்ராஹீம் சிக்கியுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியில் செல்லும் போது கூடுமானவரை தங்கள் வீட்டின் படுக்கை அறையை சாவியால் பூட்டிச்செல்வது அவசியம் என்கின்றனர் காவல்துறையினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments