ஹமாஸ் போராளிகள் பிணை கைதியாக பிடித்துச் சென்ற ஜெர்மன் பெண்

0 1242

ஹமாஸ் போராளிகளால் பிணை கைதியாக பிடித்துச்செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டு பெண், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள், திறந்தவெளி இசை கச்சேரியில் கலந்துகொண்ட ஜெர்மன் நாட்டு பெண் டாட்டூ கலைஞர் ஷனி லெளக்கை பிணை கைதியாக பிடித்தனர்.

ஹமாஸ் போராளிகள் சென்ற பிக்-அப் டிரக்-கில் ஷனி லெளக் ஆடைகளின்றி கிடப்பது போன்ற காணொலி இணையத்தில் வைரல் ஆனது.

ஷனி லெளக்-கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவரது தாயார், மகளை மீட்டுத்தருமாறும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கிடையே ஷனி லெளக்கை ஹமாஸ் போராளிகள் சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments