RECENT NEWS

தந்தையை சாக்குப்பைக்குள் கட்டி கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்

தந்தையை சாக்குப்பைக்குள் கட்டி கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்

Mar 18, 2026

தந்தையை சாக்குப்பைக்குள் கட்டி கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்

தந்தையை சாக்குப்பைக்குள் கட்டி கொரியரில் அனுப்ப முயன்ற இளம்பெண்

Mar 18, 2026

முகப்பு

Body Packing...பவர் ஃபுல் போதை ஸ்ரீ காந்த் -கிருஷ்ணா அண்ட் கோவுக்கு ஏற்படப்போகும் ஆபத்து இதுதான்...Dr எச்சரிக்கை..!

Jun 27, 2025 11:28 AM

169

Body Packing...பவர் ஃபுல் போதை ஸ்ரீ காந்த் -கிருஷ்ணா அண்ட் கோவுக்கு ஏற்படப்போகும் ஆபத்து இதுதான்...Dr எச்சரிக்கை..!

ஸ்ரீ காந்த் -கிருஷ்ணாவுக்கு ஏற்படப்போகும் ஆபத்து பவர் ஃபுல் போதை; Dr சொல்லும் எச்சரிக்கை..!

நடிகர் சூர்யாவின் அயன் பட பாணியில், கொக்கைன் போதைப் பொருளை கடத்துவோர், கேப்சியூல் வடிவில் Body Packing என்ற பெயரில் போதை பொருளை விழுங்கி, விமானம், ஏர் கொரியர் மூலம் சப்ளை செய்வோர் மற்றும் இந்த போதை பொருட்களை உட்கொள்வதாக ஏற்படும் விபரீதம் குறித்து மருத்துவரின் எச்சரிக்கை தகவல்களுடன் விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு...

உலகிலேயே மூன்று தாவரங்களில் இருந்து
தான் கஞ்சா, கொக்கைன், ஹெராயின் ஆகிய போதை பொருள் கிடைப்பதாக கூறும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட தாவரத்தில் இருந்து கொக்கைன் இயற்கையாக கிடைக்கிறது என சுட்டிக்காட்டுகிறார்கள்.

கொக்கைன் என்ற போதை பொருளானது, தென் அமெரிக்கா, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் இருந்து விமானம், ஏர் கொரியர் மூலமே இந்தியாவுக்குள் கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கடத்தல் தொழிலில் ஈடுபடுவோர், இதனை பாடி பேக்கிங் அதாவது காண்டத்தில் அடைத்து அதனை விழுங்கி விமானம் வழியாக கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இப்படி, உடலுக்குள் விழுங்கி கடத்தி கொண்டுவரப்படுவதாலும் இந்த போதை பொருட்களை உட்கொள்வதாலும் ஏற்படும் விளைவுகள் குறித்து கடுமையாக எச்சரிக்கிறார், நரம்பியல் துறை நிபுணர் மீனாட்சி சுந்தரம்...


குறிப்பாக, பவர் ஃபுல் போதை பொருளான கொக்கைனை எடுப்பதால், உடலின் நரம்பு மண்டலத்தின் தூதுவராக இருக்கும் Neuro transmeter என சொல்லப்படும் dopo mine ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை அனுப்பி சீராக இருக்கும் உடலின் செயல்பாட்டை dopo mine அதிகரிக்க செய்வதுடன், உடலை சோர்வு அடைய செய்து, அடுத்தடுத்து தாழ்வு மனப்பான்மையை அடையச் செய்யும் என சுட்டிக்காட்டுகிறார், நரம்பியல் துறை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

கொக்கைன் போன்ற போதை பொருள் கடத்தலும், பாஸ்போர்ட் இல்லாமல் அமெரிக்க நாட்டுக்குள் வருவோரை தடுக்க அமெரிக்க - மெக்சிக்கோ நாட்டின் இடையே மிகப்பெரிய மதில் சுவரை கட்டி வரும் அமெரிக்காவின் அதிபர் டிரப்பின் தேர்தல் வாக்கு உறுதிகளில் ஒன்று என்பது குறிப்பிட தக்கது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies