வேலூரில் பூஜையின் போது சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்தால் மூதாட்டி ஒருவர் மூச்சு திணறி உயிரிழப்பு

0 765

வேலூர் மாவட்டத்தில், பூஜையின் போது சாம்பிராணியால் ஏற்பட்ட தீ விபத்தால் மூதாட்டி ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

குடியாத்தத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஆசிரியரான சண்முகத்தின் 71 வயதான மனைவி ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை இரவில் சுவாமி படங்கள் முன்பு கம்பியூட்டர் சாம்பிராணிகளை ஏற்றி வைத்துள்ளார்.

அதன் தணல் கீழே இருந்த பஞ்சு மெத்தையில் பட்டு தீ பற்றிய நிலையில், ராஜேஸ்வரி குளியலறைக்குள் சென்று பதுங்கியுள்ளார்.

வீடு பூட்டப்பட்டிருந்ததால் புகை வெளியேற முடியாமல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் ராஜேஸ்வரி உயிரிழந்தாக 108 மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments