கதறி அழுத விஜய் ஆண்டனி..! கலங்கி நின்ற திரையுலகம்..!!

0 2917

ஆசையாக வளர்த்த மகளை இழந்த சோகம் தாளாமல் விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் கதறி அழுதனர். அவர்களது மகள் மீராவின் உடலுக்கு திரைத்துறையினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடல். மகளின் உடலை பெற்றுச் செல்வதற்காக மருத்துவமனை வளாகத்தில் காலையில் இருந்து காத்திருந்தார் விஜய் ஆண்டனி.

ஆசையாக வளர்த்த மகளை இழந்த சோகம் தாங்காமல் கதறினார் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா. அவரை தேற்ற முயன்றவர்களும் ஃபாத்திமாவைப் பார்த்து தேம்பி நின்றனர்.

மீராவின் மரணம் பற்றி அறிந்து முதல் ஆளாக அவரது வீட்டுக்கு சென்ற நடிகர் சந்தானம், வீடு பூட்டி இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.

திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்கே சென்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து அவருடன் இருந்தனர்.

ஆறுதல் கூறச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் மனமுடைந்து மரம் ஒன்றின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார்.

உடற்கூராய்வுக்குப் பின் மீராவின் உடல் விஜய் ஆண்டணியிடம் ஒப்படைக்கப்பட்டது. காலையில் இருந்து கண்ணீர் மல்க காத்திருந்த விஜய் ஆண்டனி மகளின் உடலைப் பார்த்து கதறியபடி ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றார்.

விஜய் ஆண்டனியின் மகள் மீரா உடலுக்கு திரைத்துரையினர் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மீராவுடன் படித்த மாணவிகள் பலரும் பள்ளிச் சீருடையிலேயே வந்து தங்கள் தோழிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் மீராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உதயநிதி சென்ற போது விஜய் ஆண்டனி வீட்டு வாசலில் மழை நீர் தேங்கி இருந்தது. இதைப் பார்த்து சரி செய்யுமாறு அமைச்சர் உதயநிதி கூறியதை அடுத்து, உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் ஜல்லி மற்றும் மணலைக் கொட்டி சாலையை சீர் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments