இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 7 பேர் காயம்

0 2394

ஈரானில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஷிராஸ் நகரில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலத்தில் புகுந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு 7 பேர் காயமடைந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments