மணிப்பூரில் மீண்டும் வன்முறை - 3 பேர் பலி..!

0 1040

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், ஏராளமான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி சமூக மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 3 மாதத்திற்கும் மேல் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில் பிஷ்ணுபூர் மாவட்டம் குவாக்டா பகுதியில் தங்கள் வீடுகளுக்கு காவல் இருந்த மெய்தி சமூகத்தை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து குக்கி மக்களின் ஏராளமான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments