அறக்கட்டளை மூலம் அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் மோசடி.. !!

0 1163

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில் ஆதவா என்ற தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், அந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆதவா அறக்கட்டளையின் நிறுவனரான பால குமரேசன், தனது அறக்கட்டளை மூலம் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாகக்கூறி 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரிடம் 3 முதல் 5 லட்சம் வரை ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு பணம் கொடுத்த ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டு வேலை பார்த்தும் வருகின்றனர்.

3 லட்சம் ரூபாய் கொடுத்தவர்களுக்கு 15 ஆயிரமும், 5 லட்சம் ரூபாய் கொடுத்தவர்களுக்கு 25 ஆயிரமும், ஆதவா அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு மாதமும் ஊதியமாக கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த 7 மாதங்களாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் பால குமரேசன் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆதவா அறக்கட்டளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால குமரேசனை போலீசார் நேரில் கொண்டு வந்து நிறுத்தும் வரை, போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments