ஏதென்ஸ் அருகே கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ.. குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால் மக்கள் வெளியேற்றம்.. !!

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அதிக வெப்பம் காரணமாக கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீ, அஜியோஸ் சோடிராஸ் என்ற கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.
கிரீஸில் இன்று முதல் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றும் வார இறுதியில் வெப்பநிலை 113 பாரன்ஹீட் ஆக பதிவாகக்கூடும் என்றும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Comments