முனியாண்டி விலாஸா? இல்ல மரண விலாஸா..? ப்ரிட்ஜில் சோறு - புரோட்டா மாவு..! இதையா சாப்பிட கொடுக்கறீங்க..?

0 3285

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முனியாண்டி விலாஸ் உணவகத்தில் , முந்தின நாள் சமைத்து மீந்து போன உணவுவகைகளை பதப்படுத்தி சூடாக்கி கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி கடை செயல்பட தடை விதித்தனர்.

பிரைடு ரைஸ் போடுவதற்கு சமைக்கப்பட்ட சோறு... புரோட்டாவுக்காக போடப்பட்ட மைதா உருண்டை, பழைய சிக்கன் போன்ற முந்தின நாள் உணவை பிரிட்ஜில் பத்திரமாக பதப்படுத்தி வைத்த புகாருக்குள்ளாகி இருக்கும் முனியாண்டி விலாஸ் உணவகம் இது தான்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முணியாண்டி விலாஸ் என்ற உணவகம் உள்ளது. இங்கு உணவருந்திய அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன், இந்த உணவகத்தில் முந்தின நாள் சமைத்து மீந்து போன உணவை பதப்படுத்தி மீண்டும் சூடாக்கி விற்பனை செய்வதாக வாட்ஸ்அப் மூலம் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திறந்து போடப்பட்டிருந்த குழம்பு வகைகளையும் அதில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மிளாய் பொடி கரைசலையும் கண்டு மிரண்டு போன் ஆபீசர்ஸ், அங்கிருந்த அளவுக்கதிகமாக வர்ணம் கலக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை கைப்பற்றி டெட்டால் ஊற்றி அழித்தனர்

முந்தின நாள் சமைத்த உணவை மீண்டும் பதப்படுத்தி விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும், உணவகத்தை அசுத்தமாக வைத்திருப்பதாகவும் கூறிய அதிகாரிகள் , தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் மாநகராட்சி சார்பில் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

உணவகத்தை தூய்மைப்படுத்திய பின்பு மீண்டும் தாங்கள் ஆய்வு செய்த பின்னரே கடையை திறக்க வேண்டும் என்றும் அதுவரை உணவகம் செயல்படக்கூடாது என்று தடை விதித்து சென்றனர்

இதே போல தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள இன்சுவை ஓட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கெட்டு போன சிக்கனை கண்டுபிடித்தார்.

நான்கு கிலோ சாப்பாடு மற்றும் நூடுல்ஸும் வெகு நேரத்திற்கு முன்பு சமைத்து வைக்கப்பட்டிருந்தது

அவற்றை மொத்தமாக ஒரு பேரலில் கொட்டி அதில் பினாயில் ஊற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தார். மொத்தம் 6000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. குற்றாலத்தில் சீசன் தொடங்கி சுற்றுலாபயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உணவகங்களில் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments