போதிய பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவர்கள் அவதி.. படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம்.. !!

0 750

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குளத்தூர் நாயக்கர் பட்டி கிராமத்தில் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர.

சுமார் 4,000 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில் உயர்நிலை பள்ளி வரை மட்டுமே உள்ளதால், 6 கிலோமீட்டருக்கு அப்பால், தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்தில் சென்று மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.

அந்த வழி தடத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், படிக்கட்டுகளில் தொங்கியபடியும், முன்பின் தெரியாதவர்களிடம் லிஃப்ட் கேட்டும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பேருந்து கிடைக்காத நாட்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டிற்கு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

குளத்தூர் நாயக்கர் பட்டியிலிருந்து மருங்குளத்திற்கு கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு கிராம மக்கள் நெடுங்காலமாக கோரிக்கை வைத்துவரும் நிலையில்  தங்கள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த, அவர்கள் 2 லட்ச ரூபாய் நிதி திரட்டி பள்ளி நிர்வாகத்திடம் வழங்கியதாகவும் தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments