மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் - மாநிலம் முழுவதும் 339 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்....

மேற்குவங்கத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறையில் 37 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 18 பேர் தேர்தல் நாளன்று ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டனர்.
வன்முறை காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட 696 வாக்குச் சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், மேற்குவங்க உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் 339 மையங்களில் நடைபெற்று வருகிறது.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்புக்கு மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஹவுராவில் உள்ள ஒரு வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
Comments