நூல் மில்கள் உற்பத்தி நிறுத்தம் அடுத்து நடக்கப் போவது என்ன? பங்களாதேஷுக்கு செல்லும் ஆர்டர்..! தீர்வுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள்

0 2905

மின்கட்டண உயர்வு மற்றும் நூலுக்கு உரிய விலை வழங்க கோரி 400க்கும் மேற்பட்ட கழிவு பஞ்சு நூல் மில்கள் வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, ஈரோடு , கரூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நூற்பாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஒ. இ. மில்கள் திருப்பூர், கரூர் ,கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கிவருகின்றன. இந்த மில்களில் தினமும் 1,400 டன் அளவுக்கு கலர் மற்றும் கிரே நூல் உற்பத்தி செய்யப்படுகின்றன .

இதனிடையே, மின்கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால் தமிழகம் முழுவதுமுள்ள 400 ஓ.இ.மில்களில் முழுமையாக உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை துவங்கி உள்ளதாகவும், மின்கட்டண உயர்வு மற்றும் உற்பத்தி செய்யும் நூலுக்கு உரியவிலை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்த மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு தலைவர் ஜெயபால், தற்போது இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நான்கு மாவட்டங்களிலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்

கழிவு பஞ்சு நூல் மில்கள் வேலை நிறுத்தம் காரணமாக கரூரில் உள்ள ஜவுளி துணி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கையிருப்பில் இருக்கும் நூல்கள் விலை ஏறும் நிலை ஏற்படுவதுடன், விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார் துணி ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments