பிரதமர் மோடியின் மேற்கோள் பதித்த டி.சர்ட் பரிசளித்தார் அதிபர் ஜோ பைடன்..!

உலகின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக்கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் புகழ் பெற்ற அந்த மேற்கோள் பதித்த டி.சர்ட் ஒன்றை, இந்திய- அமெரிக்கத் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நிறுவனத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் மோடிக்கு பரிசளித்தார்.
Comments