செந்தாழம் பூவில்... வந்தாடிய தென்றல்... சரத்பாபு காலமானார்..!

0 1952

தமிழ் திரை உலகில்  நாயகர்களின் நண்பராக நடித்து பிரபலமான நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முக்கியமான வேடங்களை ஏற்று மக்கள் மனதில் செந்தாழம் பூவாக பதிந்த சரத்பாபுவின் திரைப்பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான சத்யம் பாபு தீக்சிதுலு என்கிற சரத்பாபு நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும் படங்களின் மூலம் தமிழகத்தில் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.

கமல்ஹாசனுடன் சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி , சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு

ரஜினியுடன் நெற்றிக்கண், வேலைக்காரன். அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்

தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத்பாபுவுக்கு மெட்டி, கீழ்வானம் சிவக்கும், சங்கர் குரு போன்ற படங்கள் சிறப்பு பெயரை பெற்றுத்தந்ததன.

நடிக்க வந்த புதிதில் 1974 ஆம் ஆண்டு தன்னை விட 5 வயது மூத்தவரான நடிகை ரமா பிரபாவை காதலித்து திருமணம் செய்த சரத்பாபு, 1988 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு , நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை திருமணம் செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2011 ஆம் ஆண்டு சினேகாநம்பியாரையும் விவாகரத்து செய்து விட்டு ஆந்திராவில் தனது சகோதரியின் குடும்பத்தினருடன் வசித்து வந்த சரத்பாபு தெலுங்கு படங்களில் தந்தை வேடங்களில் நடித்து வந்தார்

இந்த நிலையில் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு நீண்ட நாட்களாக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சரத்பாபுவின் உடல் நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் அதிகார பூர்வமாக தெரிவித்தனர்.

திரை பயணத்தின் 50 வது ஆண்டில் சரத்பாபு உயிரிழந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் , நடிகர்கள் ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் மற்றும் தமிழ், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments