காதலியை கழுத்தை நெறித்துக்கொன்ற ஆண் நண்பர்... வேறு சில ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில் வெறிச்செயல்...!

0 2452

ஆந்திராவில், காதலி வேறு சில ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில், அவரை கடற்கரைக்கு வரவழைத்து கழுத்தை நெறித்துக் கொலை செய்த ஆண் நண்பர் போலீசில் சரணடைந்தார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிராவணி என்ற இளம்பெண் திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சிராவணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் சிராவணி வேறு சில ஆண்களுடன் பேசி வந்ததாகவும், இதனை பலமுறை கோபால் கண்டித்தும், அவர் தனது ஆண் நண்பர்களிடம் தொடர்ந்து பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோபால், நேற்றிரவு சிராவணியை விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வரவழைத்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், தாமாக சென்று கோபால் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments