மகன் கண் முன்னே தந்தையை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பல்.. பழிக்குப்பழியா?

0 1946

சென்னை ஆதம்பாக்கத்தில் பழிக்குப்பழியாக ஒருவரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் 15 வயதான தனது மகனுடன் உறவினர் ஒருவரின் 16ஆம் நாள் காரிய நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தடுக்க வந்த மகன் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சீனிவாசன் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கிலும், 2021 ஆம் ஆண்டு ஆதம்பாக்கத்தில் ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர் என்பது தெரிய வந்தது.

எனவே பழி தீர்க்கும் விதமாக சீனிவாசனை மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments