விஷசாரயம் குடித்த 16 பேரில் மூன்று பேர் உயிரிழப்பு..!

0 1690

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷ சாராயம் குடித்த 16 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாரயம் விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சாராயம் குடித்து விட்டு சிலர் வீட்டுக்கு திரும்பிய உடன் மயக்கமடைந்துள்ளனர்.

இதையடுத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுரேஷ், சங்கர்,தரணி வேல்  என்ற 3பேர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் மேலும் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் மது அருந்திவிட்டு யாரேனும் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments