குறிவைத்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. முறியடித்து வருவதாக உக்ரைன் தகவல்..!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பாக்முட், டொனெட்ஸ்க், குப்யான்ஸ்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. பாக்முட் மற்றும் மரின்காவைச் சுற்றி கடுமையான சண்டை நடந்துவருகிறது.
உக்ரைனின் கவச வாகனங்கள், வெடிமருந்து கிடங்குகள், ராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments