வறுமை காரணமாக மூன்று மாத பெண் குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற தாய்..!

0 6708

வறுமை காரணமாக நான்காவதாகப் பிறந்த பெண் குழந்தையை காட்பாடி ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற பெற்றோரை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த ரயில்வே போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை  காட்பாடி இரயில் நிலையத்தில் 4 மாத பெண் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், ரயிலுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்துவிட்டு கழிவறை சென்றுவருவதாகக் கூறியவர் திரும்பி வரவில்லை.

இது குறித்து ரெயில்வே போலீசாரிடம் மூதாட்டி முறையிட, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குழந்தையை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு தனது கணவர் 3 குழந்தைகளுடன் அந்த பெண் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.

சிசிடிவியை வைத்து வேலூர் மோதக்கல் கிராமத்தில் வைத்து குழந்தையின் பெற்றோரான விஜய் - கலைச்செல்வியை கண்டுபிடித்தனர்.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பதும், கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், இந்த குழந்தையை யாரிடமாவது ஒப்படைத்துவிட முடிவு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த தம்பதிக்கு அறிவுரைக் கூறி, குழந்தையை ஒப்படைத்த போலீசார், குழந்தை நலக் குழுக்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments