காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் பேராசிரியர் கைது...!

0 1017

மதுரை மாவட்டம் கப்பலூரில் உடன் பணியாற்றும் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொகுப்பூதிய பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் பேரையூர் அருகே உள்ள ஏழுமலை கிராமத்தை சேர்ந்த ரகுபதி என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் துறையில் தொகுப்பூதிய பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், போதைக்கு அடிமையான ரகுபதி தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கல்லூரியில் உடன் பணியாற்றும் பேராசிரியை ஒருவருக்கு ரகுபதி கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் பேராசிரியை புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் பாடம் நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments