திருப்பத்தூர் அருகே மின்மாற்றியில் பழுதுநீக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் உயிரிழப்பு

0 1190

திருப்பத்தூர் அருகே மின்மாற்றியில் பழுது நீக்கும் பணிக்காக ஏறிய மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், சக ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடப்பள்ளியைச் சேர்ந்த தமிழ்ராஜ் என்ற திருமணமாகாத 28 வயது இளைஞர், மடவாளம் மின்வாரிய அலுவலகத்தில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 25ஆம் தேதி சோமலாபுரம் பகுதியிலுள்ள மின்மாற்றி ஒன்றில் பழுது பார்ப்பதற்காக ஏறியவர், மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழ்ராஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மின்மாற்றிக்கு வரும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாக சக ஊழியர்கள் கூறியதை நம்பியே அவர் மேலே ஏறியதாகவும் ஆனால் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்கள் மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி, தமிழ்ராஜின் சடலத்தை சாலையில் கிடத்தி மறியலில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments