சூடானில் இருந்து 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி திரும்பினர்!

0 863

உள்நாட்டுப் போர் நடைபெற்றுவரும் சூடானில் இருந்து, 'ஆப்ரேசன் காவேரி' திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 360 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.

சூடானில் ராணுவத்திற்கும்-துணை ராணுவப்படைக்கும் இடையே தொடரும் மோதலால் அங்கு சிக்கித் தவித்துவரும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்காக 'ஆப்ரேசன் காவேரி' என்ற திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.

அதன்படி, சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்துவந்த இந்தியர்கள் 534 பேர், இரண்டு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் கடற்படை கப்பலான சுமேதா மூலம், சூடான் துறைமுகத்தில் இருந்து மீட்கப்பட்டு சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர், அங்கிருந்து முதற்கட்டமாக 360 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை புறப்பட்ட சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் இரவு டெல்லி வந்துசேர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments