லிப்ட் கொடுத்த உறவினர்.. நம்பிய ஸ்கூல் பொண்ணு.. காரில் காத்திருந்த கொடூரம்..! காட்டுப்புதரில் சடலமான பின்னணி..!

0 3215

பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொன்று வீசியதாக பக்கத்து வீட்டு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்..

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தவிட்டுக்கோடு மந்து பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் உதகையில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். திங்கட்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த மாணவி வழக்கமாக நடந்தோ, பேருந்திலோ வீட்டுக்கு செல்வார் என்றும் சில நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டாரின் வாகனங்களில் ஏறியும் வீட்டிற்கு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. அதன்படி சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ரஜ்னேஷ் குட்டன் என்பவர் அழைத்ததன் பேரில் அவரது காரில் ஏறி சென்றதாகவும் சக மாணவிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ஒரு பக்கமும், கிராம மக்கள் ஒரு பக்கமும் இரவு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது பள்ளி மாணவி வழக்கம் போல் வீட்டிற்கு செல்லும் சாலையையொட்டி கார் ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றது. அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது பதற்றத்துடன் சுற்றிய ரஜ்னேஷ் குட்டன் என்பவர் தனது ஆல்டோ காரை அங்கே விட்டுச்சென்றதாகவும், அப்போது தான் எடுத்த வீடியோ வையும் போலீசில் ஒப்படைத்தார்

அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது மாணவியின் புத்தக பை கிடந்தது. சற்று தொலைவில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் அந்த மாணவி சடலமாக கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிணக்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. பிரபாகர் இரவு நேரில் சென்று மாணவியின் சடலத்தை பார்வையிட்டு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.விசாரணையில் பள்ளியில் இருந்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்த மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக ஏமாற்றி லிப்ட் கொடுத்து அழைத்துச்சென்ற ரஜ்னேஷ் குட்டன், அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் கடத்திச்சென்று மாணவியை துன்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். அந்த மாணவி கத்திக் கூச்சலிட்டதால் காரில் கிடந்த இரும்புக்கம்பியால் அடித்து கொலை செய்து, தனது இச்சையை தீர்த்துக் கொண்டு சடலத்தை புதர்பகுதியில் வீசி விட்டு காரை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு தப்பிச்சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர். கொலையாளி ஊட்டியில் இருந்து தப்பிவிடாத வகையில் தனிப்பட்டை அமைத்து தேடி வரும் போலீசார் , தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments