இருசக்கர வாகனம் மீது கார் மோதி கட்டுமானத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி..!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தொழிலாளி ஒருவர் பலியான நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டமலைப் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ரவி என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு கார் மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே ரவி உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments