அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட்டதை உறுதி செய்யும் கருவி..!

மகாராஷ்டிராவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நவீன இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முதற்கட்டமாக கட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் தோட்ஷா ஆஸ்ரம் அரசுப்பள்ளியில் இந்த நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், மாணவி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவுடன் அந்த இயந்திரத்தில் ஏறி நின்றதும், மாணவியை புகைப்படம் எடுக்கும் அந்த கருவி, அவரது உயரம், எடைக்கு ஏற்ப தட்டில் உள்ள உணவுகள் ஊட்டச்சத்து உள்ள உணவா? என்பதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து தெரிவிக்கிறது.
பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளதால் இவ்வா
Comments