புனேவில் தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து.. 4 பேர் பரிதாபமாக பலி..!

0 1114

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததுடன், 22 பேர் பலத்த காயமடைந்தனர்.

சதாராவில் இருந்து தானேவில் உள்ள டோம்பிவிலி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அதிகாலை 3 மணியளவில்  நார்ஹே பகுதிக்கு அருகே புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, பின்னால்  சர்க்கரை ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி பேருந்தின் பின்பகுதியில் மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த 3 பேரும், லாரி டிரைவரும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments