காவிரி கரையில் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலியான சோகம்..!

0 2183

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையில் நண்பனின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

மேட்டூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் சரவணனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அந்தக் கல்லூரி மாணவர்கள் 2 பேரும், எடப்பாடி அரசுக் கல்லூரி மாணவர்கள் 8 பேரும், கல்வடங்கம் சென்றனர். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய பிறகு வெயிலின் தாக்கத்தினால் 10 பேரும் ஆற்றில் இறங்கி குளித்த போது சிலர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிறிய அளவில் பாறைகள் இருந்ததால் அதில் சிக்கிக் கொண்ட ஒரு மாணவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஒருவர் பின் ஒருவராக 4 பேர் பாறை இடுக்கில் சிக்கி தண்ணீரில் மூழ்கவே, மற்ற மாணவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், மீனவர்களுடன் இணைந்து சுமார் 4 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மாணவர்கள் 4 பேரை சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments