ரவுடியும் முன்னாள் எம்.பியுமான ஆத்திக் அகமது மகன் மற்றும் கூட்டாளியை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்..!

உத்தரப்பிரதேசத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.பியின் மகன் மற்றும் அவனது கூட்டாளியை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த வழக்கறிஞர் உமேஷ்பால் பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரவுடியும் முன்னாள் எம்.பியுமான ஆத்திக் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜான்ஸி பகுதியில் தேடுதல் வேட்டையின் போது என்கவுன்ட்டரில் இருவரும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள சிறப்பு படையினர் அவர்களிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
Comments