ரஷ்யாவிற்கு 40,000 ராக்கெட்களை வழங்க எகிப்து திட்டம்..!

ரஷ்யாவிற்கு நற்பதாயிரம் ராக்கெட் ஏவுகணைகளை ரகசியமாக வழங்க எகிப்து திட்டமிட்டுருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
எகிப்து அதிபர் அப்டெல் எல்-சிசி, மேற்கத்திய நாடுகளுக்குத் தெரியாமல் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை தயாரித்து வழங்குவது தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக, அண்மையில் இணையத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் மத்திய கிழக்கு நாடாக எகிப்து இருந்துவரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலால் இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
Comments