கஞ்சா அடிக்க ஆயத்தமாகும் வீடியோவை சமூக வலைத்தள நேரலையில் பகிர்ந்த இளைஞர் கைது..!

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா அடிக்க ஆயத்தமாகும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் நேரலையில் பகிர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பாச்சூர் அந்தோனியார் நகரை சேர்ந்த வீரா என்பவர், இன்ஸ்டாகிராமில் நேரலையில் அரை நிர்வாணத்துடன் தோன்றி, கையில் கஞ்சா மற்றும் கத்தியை வைத்துக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததுடன், வீரா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த திருவள்ளூர் தாலுகா போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Comments