RECENT NEWS

சட்டப் பல்கலைக் கழக விடுதி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

முகப்பு

நாடு கடந்து வளர்ந்த காதல்.. கைக்கூடிய நேரத்தில் சோகம்.. விமானத்தோடு கருகிய கனவுகள்

Jun 15, 2025 02:24 PM

1148

நாடு கடந்து வளர்ந்த காதல்.. கைக்கூடிய நேரத்தில் சோகம்.. விமானத்தோடு கருகிய கனவுகள்

நாடு கடந்து வளர்ந்த காதல்.. கைக்கூடிய நேரத்தில் சோகம்..

அகமதாபாத் விமான விபத்தில் இளம்ஜோடியின் கல்யாண கனவுகள் கருகிய சோகம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 27 வயதான விபூதிபென் படேல் என்ற இளைஞர், குஜராத்தில் உள்ள கல்லூரியில் பிசியோதெரபியில் இளங்கலை பட்டம் பெற்றவர். முதுகலை படிப்பிற்காக இங்கிலாந்து சென்ற அவர் லெய்செஸ்டர் கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது அங்கு ஹர்திக் அமையா என்ற பெண்ணோடு விபூதிபென்னிற்கு காதல் மலர்ந்தது. இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில், இருவரும் 10 நாட்கள் விடுப்பில் இங்கிலாந்திலிருந்து குஜராத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்றதும் இருவீட்டார் முன்னிலையில் விபூதிபென் - ஹர்திக் அமையா தம்பதியினருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண நாளை எண்ணி இருவரும் ஆவலோடு காத்திருந்த நிலையில், இருவரும் ஏர் இந்தியா விமானத்தில் இங்கிலாந்து நோக்கி புறப்பட்டனர்.

அப்போது விமானம் மருத்துவ கல்லூரி கட்டிடத்தின் மேல் விழுந்து ஏற்பட்ட கொடூர விபத்தில் விபூதிபென் - ஹர்திக் அமையா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பல ஆயிரம் மைல்களை தாண்டி ஏற்பட்ட காதல், திருமணத்தில் கைகூட இருந்த நேரத்தில் இருவரும் உயிரிழந்த சம்பவம் இரு வீட்டினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குடும்பங்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்த காதல் விமான விபத்து காரணமாக அரும்பிலேயே கருகிப் போனது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரூ.4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவவீரர்..! மகள்களின் குற்றச்சாட்டு என்ன ?

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies