ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் ரூ.2.80 கோடி கொள்ளை - 2 பேர் கைது

0 1969

கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் கொள்ளை போன சம்பவத்தில், அவரது பள்ளிக்கால நண்பரே பணத்தை திருடியது தெரியவந்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுதர்ஷன் என்பவர், கோபி பார்க் வீதியில் தான் முன்பணம் கொடுத்து புதிதாக வாங்கி, இன்னும் குடிபோகாத புதிய வீட்டின் படுக்கையறையில் வைத்திருந்த பணம், 2 சவரன் நகை காணாமல் போனதாக கடந்த 7ம் தேதி போலீசில் புகாரளித்தார்.

இந்த நிலையில், கரட்டடிப்பாளையம் அருகே காரில் கட்டுக்கட்டாக பணத்துடன் ஸ்ரீதரன், பிரவீன் ஆகிய இருவர் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் தான் சுதர்சன் வீட்டில் கைவரிசையைக் காட்டியது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீதரன் சுதர்சனின் பள்ளிக்கால நண்பன் என்பதால், தனது வீட்டில் பணம் வைத்திருந்தது பற்றி சுதர்சன் அவனிடம் பகிர்ந்துள்ளார். சொந்த தொழிலில் இறங்கி, பல லட்சம் ரூபாய் நஷ்டமாகி, கஷ்டத்தில் இருந்த ஸ்ரீதரன், தனது சித்தி மகனுடன் சேர்ந்து சுதர்சன் வீட்டில் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments