இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தாக்கி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக திருடிய 2 பேர் கைது..!

கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை தாக்கி செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்த 2பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுபாக்கத்தை சேர்ந்த மதியழகன் என்பவர் தனது வாகனத்தில் சென்ற போது அவரை 2பேர் கட்டையால் தாக்கி இரு சக்கர வாகனத்தை பறித்து சென்றுள்ளனர்.
சற்று நேரத்தில் அதே கும்பல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஐவதுகுடி கிராமம் அருகே ஆதியூரை சேர்ந்த சதீஷ்குமாரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றது.
இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருவதாக கிடைத்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 2பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 7 செல்போன் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Comments