''பொய் குற்றச்சாட்டுகளில் இருந்து எந்த பாடத்தையும் ராகுல் கற்கவில்லை..'' - நிர்மலா சீதாராமன்..!

அதானி விவகாரத்தில் பிரதமர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, ராகுல் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவிலுள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019 தேர்தலுக்கு முன்பும் பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய ராகுல்காந்தி, தற்போது மீண்டும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் என்றும் பிரதமருக்கு எதிராக அவர் சுமத்த நினைக்கும் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொள்வதாக தெரியவில்லை என்றும் கூறினார்.
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது டெண்டர் விடப்படாமல் விழிஞ்சம் துறைமுகத் திட்டம் இதே அதானியிடம் தான் வழங்கப்பட்டது என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போதுள்ள கம்யூனிஸ்ட் அரசிடம் கேட்க ராகுலைத் தடுத்தது எது? என்றும் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
Comments