ஆர்ட்டெமிஸ்-2 நிலவுத் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பெயர்களை வெளியிட்டது நாசா

0 957

ஆர்ட்டெமிஸ் 2 நிலவுத் திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இதன் முதற்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்ட் டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது.

இந்நிலையில், ஆர்டெமிஸ் - 2 ராக்கெட் ஏவும் திட்டத்தை நாசா துவக்கியுள்ளது. இதில் நிலவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட 4 விண்வெளி வீரர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் இடம் பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில் முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் இடம் பெற்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments