சீர் வரிசையுடன் ஊர்வலமாக சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜயபாஸ்கர்

0 5375

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர் சீர் வரிசையுடன் ஊர்வலமாக சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் சேலம் வந்தார்.

பின்னர் அவர்களுடன் சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வந்து, வாழைப்பழம், பலாப்பழம், தர்பூசணி, தேங்காய், மாங்காய், உள்ளிட்ட 30 வகையான பழங்கள் மற்றும் கன்றுடன்கூடிய பசுமாடு, ஆடு, கோழி ஆகியவற்றை சீர்வரிசையாக வழங்கி எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments