குழாயடி சண்டையில் வீடு புகுந்து பெண்ணை கட்டிலின் மீது தள்ளி சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தாய், மகள் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே குழாயடி சண்டையில் பெண்ணை, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீடு புகுந்து தாக்கிய காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூங்கில்விளை காலனியை சேர்ந்த ரமேஷின் மனைவி மஞ்சுவுக்கு வீட்டின் முன்பு உள்ள தெருக்குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக அதே பகுதியை சேரந்த மகேஸ்வரி என்பவருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி மதிமகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கோபாலகிருஷ்ணன், தாய் தமிழ்செல்வி ஆகியோர் ரமேஷின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் திட்டியதுடன் ரமேஷை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவர் தப்பியோடிய நிலையில், தடுக்க வந்த மஞ்சுவை கட்டிலில் தள்ளிவிட்டு மூன்று பேரும் சரமாரியாக தாக்கியதை பார்த்து மஞ்சுவின் குழந்தைகள் பயந்து அலறியுள்ளனர்.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் மதிமகேஸ்வரி, தமிழ்செல்வியை கைது செய்த போலீசார், தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments