பிறந்தநாளன்று நண்பர்களுடன் கண்மாயில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பிறந்தநாளை கொண்டாடி விட்டு கண்மாயில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருத்தங்கல் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவரான கார்த்திக், தனது நண்பன் யோசேபு என்பவரது பிறந்தநாளை மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
பின்னர் நண்பர்கள் அனைவரும் அங்குள்ள பெரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது ஆழமான பகுதியில் சிக்கிய கார்த்திக்கும் யோசேபும், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், இருவரது உடல்களையும் மீட்டனர்
Comments