நடிகர் அமிதாப் பச்சனின் அனுமதியின்றி, அவரது பெயர், குரல், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை

0 844

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் அனுமதியின்றி, அவரது பெயர், குரல், புகைப்படங்களை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் நடிகர் அமிதாப் பச்சனின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பச்சனின் அனுமதி பெறாமல் பலர், லாட்டரி விற்பனை, போலி வீடியோ கால் செயலி உள்பட தங்களது வியாபார நோக்கத்திற்கு அவரின் குரல், பெயர், புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிட்டனர்.

இதனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து தடை விதிக்க கோரினர். இதனை ஏற்று நீதிபதி நவீன் சாவ்லா, இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments