ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன்.. ஆபாச படம் அனுப்பியதால் ஐடி ஊழியர் தற்கொலை...

0 5150

சென்னையில் ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களின் மிரட்டலால் 23 வயதான ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கே.கே நகரைச் சேர்ந்த நரேந்திரன் என்ற இளைஞர், 3 மாதங்களுக்கு முன் செயலியில் 33 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடனாக பெற்ற பணத்திற்கு வட்டியுடன் 50 ஆயிரம் ரூபாய் அவர் செலுத்திய நிலையில், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் மேலும் பல செயலியில் அவர் கடன் பெற்று அதன் கட்ட இயலாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடன் செயலி நிறுவனங்கள் அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து அவரது பெற்றோர், நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments