திருமணமான இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு- கணவர், மாமியார் உட்பட 5 பேர் கைது

0 1858

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருமணமான இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலூர் அடுத்த பொட்டப்பட்டியில் உள்ள தென்னந்தோப்பில், கடந்த 29ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் பஞ்சயம்பட்டியை சேர்ந்த அர்ஜூணன் என்பவரின் மனைவி, 19 வயதான ராசாத்தி என்பது தெரியவந்தது.

அர்ஜூணன் சென்னையில் இடியாப்ப கடை நடத்தி வரும் நிலையில், ராசாத்தி வேறுஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அர்ஜூணன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ராசாத்தியை எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments