புதிய தொழிலாளர் நல கொள்கைகளின் மாற்றங்கள் இன்று முதல் அமல்.!
புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை திட்டமும் அமலுக்கு வந்துள்ளது. 3 நாட்கள் விடுமுறை இருந்தாலும் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற பழைய நடைமுறை தொடருகிறது.
அதாவது, ஊழியர்கள் தினமும் 8 மணி நேரத்திற்குப் பதில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களின் மொத்த ஊதியத்தில் 50 சதவிகிதம் அடிப்படை ஊதியமாக இருக்க வேண்டும் என்றும் புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
அடிப்படை ஊதியத்தின் அடிப்படையிலே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படுவதால், ஊழியர்களின் கைகளில் கிடைக்கும் மாத ஊதியம் குறைய வாய்ப்பு உள்ளது.
Comments