கார் ஓட்டுநரின் வீடு புகுந்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்ற கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

0 8221
கார் ஓட்டுநரின் வீடு புகுந்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்ற கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் கார் ஓட்டுநரின் வீடு புகுந்து 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கார் ஓட்டுநரான பிரகாஷ் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கியுள்ளார். அதிகாலையில் வீடு புகுந்த மர்ம கும்பல் பீரோவை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு காரில் தப்பியது.

அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட்டை இடித்து நொறுக்கி விட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், இடித்த வேகத்தில் காரின் பின்பக்கம் இருந்த நம்பர் பிளேட் கழன்று விழுந்துள்ளது.

விசாரணையில் அது குஜராத் மாநில பதிவெண் கொண்ட கார் என்பது தெரியவந்தது. நிலம் விற்பனை செய்வதற்கான முன்பணம் 20லட்சம் ரூபாயை பிரகாஷ் வீட்டில் வைத்திருந்த நிலையில், பணம் இருந்தது கொள்ளையர்களுக்கு எப்படி தெரிந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments