பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 5 பேர் ரயில் மோதி உயிரிழப்பு..!

0 3795

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது, எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில் மோதியதில் 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

செகந்திராபாத்தில் இருந்து கவுகாத்தி நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயிலில் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ரயிலில் இருந்த பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து கீழே இறங்கி கவனக்குறைவாக மற்றொரு தண்டவாளத்தில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்திசையில் வந்த கொல்கத்தா - கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியதில், பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments