கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.!
கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 24 தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை ரத்து செய்யக் கோரி 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் சமசரம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை இளம் வழக்கறிஞர்கள் நல நிதியதிற்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டுமென ராஜேந்திர பாலாஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments