தஞ்சையில் வாட்ஸ்அப் குழு அமைத்து கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த பெண் உட்பட 8 பேர் கைது.!

0 1809

தஞ்சையில் வாட்ஸ்அப் குழு அமைத்து கேரளா லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்த ஒரு பெண் உட்பட 8 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கேரளா லாட்டரி சீட்டுகளை, போலியாக கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கும்பல் பணம் பறிப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த  8 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 12 லட்சம் ரொக்கம், 4 லேப்டாப்கள், 14 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments