சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை 9 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!

ராஜஸ்தானில் 15 வயது சிறுமியை 9 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மாதம் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் வழக்கு குறித்து விசாரித்த ராஜஸ்தான் போலீசார் ஆயிரத்து 750 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வழக்கில் கைதான 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குற்றத்திற்கு உறுதுணையாக இருந்த பெண் உள்பட 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Comments